சென்னை:மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இதுவரை காணப்படாத வெண்மை நிறத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அல்பினிசம் (தோலின் நிறம் வெண்மையாக மாறப்பட்ட) வகையைச் சார்ந்ததாக ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாம்பினைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அல்பினிசம் என்பது ஒரு உயிரினத்தின் தோல் வெண்மையாக மாறிவிடுவதாகும். மேலும், அல்பினிசம் என்பது மரபியல் ரீதியாக ஏற்படும் குறைபாடு என்று தெரிவித்தனர். குறைபாடு குறித்த காரணத்தை விளக்கிய ஆராய்ச்சியாளர்கள், "வனப்பகுதிகள் துண்டாக்கப்படுவதன் காரணமாக வன உயிரினங்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. எனவே நெருக்கமான உயிரினங்களுக்கிடையே ஏற்படும் இனப்பெருக்கம் (inbreeding) போன்ற காரணங்களால் இது போன்ற குறைபாடு ஏற்படுகிறது", எனத் தெரிவித்தனர்.
Special: அதிசய வெள்ளை பாம்பு!-மேற்குதொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டது - அல்பினிசம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் வெண்மை நிறத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரிய வகை பாம்பானது உதகமண்டலத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள ஷோலூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த பாம்பானது விஷமற்றது. மேலும் இந்த பாம்புகள் பெரும்பாலும் மண், கல், இலைகளின் இடுக்குகளில் வாழ்ந்து கொண்டு மண்புழு மற்றும் சிறிய உயிரினங்களை மட்டுமே உணவாக உண்ணக்கூடிய ஒரு உயிரினமாகும். இந்த அரிய வகை பாம்பானது உதகமண்டலத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள ஷோலூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது", என ஒரு ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
உதவிப்பேராசிரியர் பி. கண்ணன், ஊர்வன மற்றும் இருவாழ்விகள் குறித்த ஆராய்ச்சியாளர், திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, திருவாரூர், கூறுகையில், "இந்த வகை பாம்பானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை சார்ந்த நீலகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படக்கூடிய அரிய வகை பாம்பாகும். இந்த பாம்பானது அந்த குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கு மட்டுமே காணப்படக்கூடிய பாம்பு. இதனுடைய கழுத்துப்பகுதி சற்று சிறிதாக இருக்கும்" என்று கூறிய அவர் இந்த பாம்பு “மரப்பாம்பு” என்றும் கூட அழைக்கப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் மட்டுமே காணப்படக்கூடியது என்றார்.
இந்த அரிய வகை பாம்புகளை பற்றிய ஆராய்ச்சிகள் மிகவும் குறைவு எனவும் பாம்பின் வடிவம் உருளையாக காணப்படும் என விளக்கினார். இதனுடைய தலை சிறியதாகவும் மூக்கு சற்று கூர்மையாகவும், முதுகுப்புற செதில்கள் வழுவழுப்பாகவும், குறுகிய வாளைக்கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக இந்த பாம்பானது ஈரமுள்ள பகுதிகளில், தேயிலை தோட்டங்கள், மனிதர்கள் வாழும் இடங்களில் காணலாம். மேலும் கோடிட்ட குறுகிய தலை பாம்பு போன்ற உள்ளூர் இனங்களின் வாழ்விடங்கள் மற்றும் நடத்தைகளைப் புரிந்துகொள்வது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள முக்கிய வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் நிலப்பரப்புகளைப் பாதுகாப்பதற்கான வழியை சுட்டிக்காட்டுகிறது எனவும் குறிப்பிட்டார்.