நீலகிரி மாவட்டம் உதகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், டார்ஜிலிங் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த 717 வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 15 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் சுமார் 86 பெண் வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
உதகையில் தேசிய அளவிலான மாரத்தான் போட்டி - Marathon
நீலகிரி: உடல் நலனை பாதுகாக்கவும், மன தைரியத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் தேசிய அளவிலான மாரத்தான் போட்டி ஊட்டியில் நடைபெற்றது.
Ooty
இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 வெளிநாட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியானது உடல் நலனை பாதுகாக்கவும், மன தைரியத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் நடந்தப்பட்டதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.