தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரிழந்த குட்டி யானையைக்காக தவிக்கும் தாய் யானை! - mother elephant stand from morning near dead baby elephant

நீலகிரி: உயிரிழந்த குட்டி யானையை விட்டுச் செல்ல முடியாமல் காலையிலிருந்து அதே இடத்தில் காத்திருக்கும் தாய் யானையின் பாசப் போராட்டம் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

baby elephant died
தாய் யானையின் பாசப் போராட்டம்

By

Published : Nov 27, 2019, 6:54 PM IST

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நாயக்கன் சோலை பகுதியில், உணவிற்காக 7 யானைகள் வனப்பகுதியில் உலா வந்துள்ளன. அப்போது, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையினால் அங்கிருந்த குட்டியானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இரவு முழுவதும் அப்பகுதியில் யானைகளின் சத்தம் கேட்டதாக அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை, குட்டியானை இறந்து கிடப்பதையும் தாய் யானை யாரையும் நெருங்க விடாமல் நிற்பதையும் பார்த்து உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.

தாய் யானையின் பாசப் போராட்டம்

பின்னர், யானையை விரட்டி விட்டு இறந்த குட்டியானையைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கை தோல்வியில் தான் முடிந்தது. காலை முதல் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டும் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " குட்டிக்காகப் பாசப் போராட்டம் நடத்திவரும் யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தனர்

இதையும் படிங்க: பயன்படாத பொருட்களினால் கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details