நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய வகை விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளன. இந்நிலையில், முதல்முறையாக வௌவால்கள் அதிகளவில் குன்னூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த நிகழ்வு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னர் அருகேயுள்ள வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வௌவால்கள் தஞ்சமடைந்துள்ளன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நந்தக்குமார் கூறுகையில், "கேரள மாநிலத்தில் இந்தாண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்து பேரிடர் ஏற்பட்டதால், அங்கிருந்து வௌவால்கள் இடம்பெயர்ந்து மலை பிரதேசமான குன்னூருக்கு வந்துள்ளது.