நீலகிரி மாவட்டத்தின் 3 மையங்களில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. உதகை அரசு சேட் மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட அவர், உதகை அரசு சேட் மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 மையங்களில் தலா 100 பேர் வீதம் மொத்தம் 300 பேருக்கு இன்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றதாகக் கூறினார்.
முகக்கவசம் அணியாதவர்கள் தொடர் கண்காணிப்பு!
நீலகிரி: முகக்கவசம் அணியாதவர்களை ஓய்வு பெற்ற ராணுவத்தினர் கொண்டு கண்காணித்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு 5,300 டோஸ் கரோனா தடுப்பு மருந்து வந்துள்ளதாகவும், 4,845 பேர் இது வரை முன்பதிவு செய்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். மேலும், மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பணியமர்த்தபட்டுள்ளதாகவும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர முன் அனுமதி கட்டாயமாக்கபட்டுள்ளதாகவும் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது- அப்போலோ குழுமத் தலைவர்