தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ரூ.42,690 பறிமுதல்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.42,690 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் பணம் பறிமுதல்
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் பணம் பறிமுதல்

By

Published : Jul 21, 2021, 12:52 PM IST

நீலகிரி: கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம், நில உரிமை சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்

தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்காக வட்டாட்சியர் கையொப்பத்துடன் கூடிய சான்று பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்குவதற்காக அலுவலகள், லஞ்சம் பெறுவதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதிரடி சோதனை

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். நேற்று (ஜூலை. 20) இரவு நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷிணி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் உள்ளிட்ட 8 பேர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர்.

தீவிர விசாரணை

தாசில்தார் அலுவலகத்தில் இரண்டு நுழைவு வாயில்களை மூடியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், இடைத்தரகர்கள், ஊழியர்கள் அனைவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

பணம் பறிமுதல்

துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரின் அறைகளில் இருந்த கோப்புக்களை சோதனை செய்து, அங்கு கணக்கில் வராமல் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.42,690 பணம் சிக்கியது.

இதையும் படிங்க:கிராவல் மணல் கடத்திய 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details