நீலகிரி:இண்ட்கோசர்வ் நிறுவனத்தை லாபத்தில் இயக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனொரு பகுதியாக இண்ட்கோசர்வ் தொழிற்சாலைக்கு தேயிலையை வழங்கும் சிறு, குறு விவசாயிகள், தொழிற்சாலை நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கா.ராமசந்திரன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தா.மோ. அன்பரசன், ”இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 16 தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களை புனரமைக்க ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வழங்கி வரும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்காக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.