தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி மாவட்டத்திற்கு 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! - nilgiri January 8 local holiday

நீலகிரி: படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

nilgiris
உள்ளுர் விடுமுறை

By

Published : Jan 4, 2020, 4:04 PM IST

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்துவருகின்றனர். இந்த மக்கள் ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டுவருகின்றனர். இந்த ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவானது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஹெத்தையம்மனுக்கு காணிக்கை கட்டும் விழா கோத்தகிரி அருகே பேரகண்ணியில் உள்ள கோயிலில் வரும் எட்டாம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்து சென்று அம்மனை வழிபடுவார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருவிழாவில் நல்ல மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்படுவது வழக்கம்.

எத்தையம்மன் கோவில் பண்டிகை

இந்த பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு நிதியுதவி: முதலமைச்சர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details