நீலகிரி மாவட்டம் உதகை அருகேவுள்ள கட்டபெட்டு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அந்த வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கட்டபெட்டு அருகேவுள்ள மசக்கல் கிராமத்தில், ஊர்மக்கள் குடி நீருக்காக பயன்படுத்தி வரும் கிணற்றில் தண்னீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அந்த கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையிலான வனத் துறையினர், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.