நீலகிரி:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது. அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யபட்டார். இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டது.
இதில் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு ஆஜர்
உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் புதிய திருப்பமாக கூடுதல் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான், நான்காவது குற்றவாளி ஜம்சீர் அலி, கனகராஜின் மனைவி, சகோதரர், நண்பர்கள் என 40 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
கோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை இதில் 8ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, 9ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மனோஜ்சாமி ஆகியோரை உதகையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகுமாறு தனிப்படை காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
இதனை தொடர்ந்து இன்று (செப்.22) மதியம் 12:30 மணியளவில் ஆஜராகி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு அறிவிப்பால் அதிர்ச்சி