தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு! - kodanadu

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சயான்

By

Published : Mar 18, 2019, 7:34 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் கோவை மத்திய சிறையில் உள்ள சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ் சாமி ஆகியோரும் ஜாமீனில் உள்ள ஜம்சீர் அலி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சதீசன், சந்தோஷ் சாமி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அப்போது, வழக்கில் சேர்க்கபட்டுள்ள சயான் மற்றும் வாளையாறு மனோஜ் தவிர மீதமுள்ள 8 பேரையும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்யபட்ட மனு தள்ளுபடி செய்த நீதிபதி வடமலை வழக்கு விசாரணையை வரும் 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் சயான் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். அப்போது சயான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சயானிடம் பேச அனுமதி கேட்டார். அதற்கு நீதிமன்றத்திற்குற்குள்ளேயே பேச நீதிபதி அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய சயான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன், சயானுக்கு கோவை சிறையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டு தண்டனை கைதிகள் பிரிவில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கூறினார். அதனை சயான் தன்னிடம் பேசும் போது கூறியதாகவும் எனவே இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் முறையிட போவதாகவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details