கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய வழக்கு விசாராணையின் போது சயான், வாளையாறு மனோஜ், சதீசன், மனோஜ், தீபு, குட்டி பிஜின் உள்பட 9 பேர் நேரில் ஆஜராகினர். உதயகுமார் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் சயான் உள்ளிட்ட 10 பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான வாதம் நடைபெற்றது.
கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிப்பு? - sayan
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சயான் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது சாயன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆனந்த் கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ளவர்கள் மீது போதிய சாட்சிகள் இல்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் குறித்து அரசு தரப்பு தவறான தகவலை குறிப்பிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினமே சயான் உள்ளிட்ட 10 பேர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பும் வழங்கப்படும் என்றார்.