நீலகிரி:கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வழக்கறிஞர்களுடன் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரித்தனர்.
வழக்கில் கூடுதல் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திர சேகர், சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.