தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி : குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் தீவிர சோதனை! - nilgries district news

நீலகிரி : சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால் குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

intensive-check-at-nilgiris-district-entrance
intensive-check-at-nilgiris-district-entrance

By

Published : Apr 22, 2021, 8:50 AM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அந்தவகையில் இந்நிலையில் ஏப்ரல். 20 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி,நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம உத்தரவிட்டுள்ளது. அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து சோதனை சாவடிகளும் முழு கண்காணிப்பில் உள்ளது.

குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் தீவிர சோதனை
நீலகிரி மாவட்டததின் முக்கிய நுழைவாயிலான பர்லியார் சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்காக சென்று வரும் உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் சரிபார்த்து அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பர்லியார் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
சிறுவர்கள் உள்பட 7 கொத்தடிமைகள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details