தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாட்படை தினம்: வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் மரியாதை செலுத்திய ராணுவ அலுவலர்கள் - Infantry Day

நீலகிரி: 74ஆவது காலாட்படை தினத்தை முன்னிட்டு குன்னூர் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நீலகிரி
நீலகிரி

By

Published : Oct 27, 2020, 1:01 PM IST

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில் காலாட்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1947ஆம் ஆண்டு, அக்டோபர் 27ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காலாட்படையினர் காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். இந்த வீரச்செயலை போற்றும் வகையில் காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு 74ஆவது காலாட்படை தினத்தின் ஒரு பகுதியாக காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

காலாட்படை தினம்

தொடர்ந்து, போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் ராணுவ வீரர்கள், பயிற்சி ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற கமாண்டண்ட் மற்றும் எம்.ஆர்.சி., கமாண்டண்ட் ராஜேஷ்வர் சிங், ராணுவ பயிற்சி கல்லூரி முதன்மை கமாண்டண்ட் லெப்டினென்ட் ஜெனரல் மோகன் உள்ளிட்ட ராணுவ உயர் அலுவலர்கள் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளியுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:ராணுவ தளவாடங்களுக்கு சந்தனம் வைத்து ஆயுத பூஜை கொண்டிய ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details