நீலகிரி:நீலகிரி மாவட்டம், குன்னூர் வனப்பகுதியில் கரிசல் மண், செம்மண்ணை சட்டவிரோதமாக வாகனங்களில் கடத்தி வருகின்றனர். குறிப்பாக குன்னூர் அருகே வனப்பகுதிகளில் அரியவகை காட்டுச் செடிகளை அழித்து செம்மண் கடத்தப்படுகிறது.
மேலும், நகராட்சியின் இடத்தில் மரங்களை வெட்டிச் சாலை அமைத்து மண் கடத்தப்பட்டுள்ளது.
குன்னூர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக மண் கடத்தல் இது குறித்து குன்னூரில் சமூக ஆர்வலர் சத்தார் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சட்டவிரோதமாக கரிசல் மண், செம்மண் எடுத்து நர்சரிகள், விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'கண்ணாடித் துகள்கள் ஏற்றிச்சென்ற லாரி - மடக்கிப்பிடித்த எம்பி'