நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் உடல் உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, சென்னை, சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ள 420 பேருடன், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இதையடுத்து, உடல் உறுப்பு தானத்தின் பயன்கள் மற்றும் அவசியத்தை நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக ஒரு மனிதன் தனது உறுப்புகளை தானம் செய்தால் 23 பேர் உயிர் வாழ முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதில் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டது.
எனவே தமிழ்நாட்டில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தபடுவதாக கூறப்பட்டது. குறிப்பாக 80 விழுக்காடு பேர் உடல் உறுப்பு பாதிப்பு காரணமாக இறப்பதாக தகவல் வெளியிடபட்டது.
உடல் உறுப்பு தான கருத்துரங்கு