நீலகரி மாவட்டம், உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயர்களால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. இதனையடுத்து இந்த1908ஆம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது.
பாதி வழியில் நின்ற மலைரயிலால் சுற்றுலா பயணிகள் அவதி
நீலகிரி: உதகையிலிருந்து குன்னூருக்கு இயக்கப்படும் மலை ரயிலில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஆசியாவிலேயே 22கிலோ மீட்டர் மலைப்பாதையில் பற்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது. 208பாலங்கள், 16குகைகள் வழியாக மலை ரயிலில் பயணிப்பது தங்களை கவரும் விதமாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெறும் வகையில் யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயிலில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் ரயில் நின்றது. என்ஜின் பழுது சரிசெய்து நீண்ட நேரத்திற்க்கு பிறகு ரயில் குன்னூர் சென்றடைந்து. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.