நீலகிரி:குன்னூர் அருகே ரண்ணிமேடு கிராமத்துக்கு உணவை தேடி மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 9 யானைகள் அடங்கிய யானைக்கூட்டம் வந்தது. இந்த யானைகள் இந்த பகுதிக்கு வந்து 24 நாட்கள் ஆகியும், வனப்பகுதிக்கு திரும்பிச் செல்லாமல் உள்ளது.
இதனால் ரண்ணிமேடு, காட்டேரி, கிளண்டல், கரும்பாலம் உள்ளிட்ட 11 கிராமங்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள மயானத்தில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டத்தை விரட்ட 9 நபர்கள் கொண்ட குழு அமைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேநேரம் யானையை விரட்டினால் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று விடும் என்பதால், வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில், “இந்த பகுதியில் யானைகளுக்கு தேவைப்படும் உணவு, தண்ணீர் ஆகியவை தாராளமாக கிடைக்கிறது. இந்த இடத்தை விட்டுச் செல்லாமல் யானைகள் தயக்கம் காட்டுகிறது.