நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரி விடுமுறை!
நீலகிரி: தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழை
இந்நிலையில், அதிக மழை பெய்து வரும் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு ஏற்கனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.