நீலகிரி: கடந்த ஐந்து நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு (Landslide) ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
மேலும், சில நாள்களுக்கு முன்பு அரவங்காடு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குன்னூர் பகுதியில் 80-க்கும் அதிகமான மரங்கள் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் வெட்டப்பட்டுவருகின்றன.