நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில் பழக்கண்காட்சி நடைப் பெறுகிறது. இதற்காக இரண்டரை லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், பால்சம், சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வகை நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் பராமரிப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அலைமோதும் கூட்டம் - kunnur sims park
நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்கா பண்ணையில் பல வெளிநாட்டு வகை மலர் நாற்றுக்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.