தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

helicopter crash: குன்னூரில் ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி - helicopter crash in nanjappa chathiram

helicopter crash: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அஞ்சலி
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அஞ்சலி

By

Published : Jan 6, 2022, 7:31 PM IST

helicopter crash:குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர்.

இந்தப் பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த வாரம் விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டரின் பாகங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதனால் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆர்.என். ரவி பார்வையிட்டு அஞ்சலி

இதனால் விபத்து நடந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் வருகையால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

இதையும் படிங்க:திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details