தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் குன்னூரில் சுற்றுலா! - குன்னூர் செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆர்.என். ரவி தனது குடும்பத்தினருடன் ஐந்து நாள்கள் சுற்றுப் பயணமாக ஊட்டி சென்றுள்ளார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

By

Published : Oct 18, 2021, 9:24 AM IST

நீலகிரி: மேலும் அவர் தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிடுகிறார்.

நேற்று (அக்டோபர் 17) உதகையிலிருந்து மலை ரயில் மூலம் குன்னூர் வரை குடும்பத்தாருடன் ரயில் பயணம் மேற்கொண்டார்.

குன்னூரிலிருந்து கார் மூலம் மீண்டும் ஊட்டிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர் வருகிற 19ஆம் தேதி ஊட்டியிலிருந்து கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்

ABOUT THE AUTHOR

...view details