நீலகிரி: மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியைப் பிடிக்கும் பணி இன்று (அக்.07) 13ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை தொடங்கப்பட்ட இந்தப் பணியில், புலியின் கால் தடங்கள் பதிவான இடங்களில் கால்நடைகளைக் கட்டி வைத்து, புலியை வரவழைத்துப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும், நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட பரண்களின் மீது வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் அமர்ந்து, மயக்க ஊசி செலுத்திப் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலியைப் பிடிக்கும் பணிகள் தீவிரம் தொடர்ந்து, சிங்காரா பகுதியில் இருந்த புலி, வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதா என்பதை, அங்கு பொருத்தப்பட்டுள்ள 85 கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:T23 புலியை ஆட்கொல்லி என சொல்ல முடியாது - வன உயிரின பாதுகாவலர்