நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் 250 ஆண்டுகள் நாட்டுக்கான மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் செய்த சாதனைகள் மற்றும் பல போர்களில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் கைப்பற்றிய துப்பாக்கிகள் ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் இந்திய ராணுவம் தொடங்கிய நாள் முதல் தற்போது உள்ள ராணுவ வீரர்களின் ஆடை வடிவமைப்பு ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இங்குள்ள திரையரங்கில் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி கொடுத்த குறும்படமும் திரையிடப்பட்டது.
வெலிங்டன் ராணுவ அருங்காட்சியகத்தில் பன்னாட்டு அலுவலர்கள் பார்வையிட்டனர் இந்த அருங்காட்சியகத்தை இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் 77ஆவது பன்னாட்டு 22 ராணுவ அலுவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் பார்வையிட்டு சென்றனர்.
ராணுவ அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், “இந்த அருங்காட்சியகத்தை காணும்போது இந்திய ராணுவத்தின் பாரம்பரியம் வீரம் சாதனை தியாகங்களை இந்திய ராணுவ வீரர்களை போற்றும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : வெலிங்டன் ராணுவ மையம்: சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்ட 66 இளம் ராணுவ வீரர்கள்