நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அத்திப் பழ மரங்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை, மவுண்ட்ரோடு, ஒட்டுபட்டரை ஆகிய இடங்களில் இந்த மரங்கள் காணப்படுகின்றது.
இம்மரங்களில் அத்திப்பழ காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து உள்ளது. சாலையோரங்களில் உள்ள மரங்களில் அத்திப் பழங்களை உண்பதற்காக அரிய வகை பறவை இனங்களும் இங்கு வந்து செல்கின்றன.
குறிப்பாக இளவஞ்சி என்ற அரிய வகை பறவைகளும் இம்மரங்களில் பழங்களை உண்பதற்காக வந்து செல்கின்றன. அத்தி மரத்தில் சீமை அத்தி, நாட்டு அத்தி, வெள்ளை அத்தி என பல வகைகள் உள்ளன.
இப்பழங்கள் ஆண்டுற்க்கு இரு முறை காய்க்கும் குன்னூர் பகுதியில் அதிக அளவு மரங்கள் காணப்படுகின்றன குறிப்பாக அத்தி பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் நிறைந்திருப்பதால் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.
மேலும் அத்திப்பழ மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மருத்துவத்திற்கும் உதவி புரிந்து வருகின்றன. எனவே நீலகிரியில் அத்திப்பழ மரங்கள் அதிகரிக்க தோட்டக்கலைத் துறை விவசாய நிலங்களில் ஊடுபயிராக வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்