நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையால் கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பல்வேறு மலை காய்கறிகள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் விளையும் வெள்ளைப் பூண்டு காரத் தன்மையுடன் கூடிய மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ குணம் உள்ளதால் மற்ற வெளிமாநிலங்களைக் காட்டிலும் நீலகிரியில் விளையும் பூண்டிற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பூண்டைப் பயிரிட்டு வந்தனர். ஆனால், உற்பத்தி செலவு அதிகம் என்பதாலும் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டதாலும் பூண்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
நீலகிரி பூண்டின் விலை உயர்வு” விவசாயிகள் மகிழ்ச்சி!
நீலகிரி: மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டின் விலை கிடுகிடுவென உயர்த்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயி
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் பூண்டு சாகுபடி குறைந்து வந்த நிலையில், தற்போது பூண்டு விலை விறுவிறுவென உயர்ந்துவருகிறது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பூண்டு பயிரிடத் தொடங்கி உள்ளனர். 3 ஆண்டுகளுக்குப் பின் பூண்டு விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால் மாவட்டத்திலுள்ள பூண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ பூண்டு ரூபாய் 500க்கு விற்கப்படுகிறது.