தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடலூர் அருகே புலி தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - farmer died

கூடலூர் அருகே புலி தாக்கி உயிரிழந்த விவசாயி உடலை உடற்கூராய்விற்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர் அருகே புலி தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
கூடலூர் அருகே புலி தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

By

Published : Jul 20, 2021, 11:09 AM IST

நீலகிரி:கூடலூர் அருகே முதுமலை ஊராட்சியில் நெங்கன கொல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சி கிருஷ்ணன். வீட்டிற்கு பொருள் வாங்க நேற்று (ஜூலை 19) மதியம் வனப்பகுதி வழியாக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் பதுங்கியிருந்த புலி ஒன்று, விவசாயின் கழுத்தை கவ்வி இழுத்துச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

எம்எல்ஏ நேரில் பார்வை

தகவலறிந்து சென்ற வனத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்தை கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டார்.

புலி தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

கிராம மக்கள் போராட்டம்

முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களை மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ் குடியமர்த்தும் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. யானை, புலிகள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

வனவிலங்கு தாக்குதலைக் கட்டுப்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வனத்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயி உடலை உடற்கூராய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: வால்பாறையில் பெருகி வரும் சிறுத்தை நடமாட்டம்

ABOUT THE AUTHOR

...view details