கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியாமல் நாடே போராடி வருகிறது. இந்நிலையில் இதற்கு உதவும் விதமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை, அவரது மனைவி கனக லதா ஆகியோர் ரெஸ்பிரேட்டருடன், எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கரோனா தடுப்பு முகக்கவசத்தை தயாரித்துள்ளனர்.
இந்தக் கவசங்கள் விமானப்படை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துபவர்கள் ஆக்சிஜன் எளிமையாக உள்ளே செல்லவும் அதில் கரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் உயிர் இழக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.