தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டம் நவம்பர் மாதம் செயல்படும்! - எமரால்டு

குன்னுார்: நீலகிரியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, 5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

water

By

Published : Jun 25, 2019, 7:13 PM IST

நீலகிரியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கண்காணிப்பு அலுவலராக மாநில தொழில் துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிர்வாக துணைத் தலைவர் நீரஜ்மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 25) குன்னூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நீரஜ் மிட்டல் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது, நீலகிரி மக்களுக்கு குடிநீரை முறையாக வழங்கும் வகையில், குறுகிய - நீண்டகால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. எதிர்கால தண்ணீர் பிரச்னையை மனதில்கொண்டு அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு, முழுமையாக தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்காக, அனைத்து உள்ளாட்சி மற்றும் நகராட்சிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.குன்னுாருக்கான எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டம் வருகிற நவம்பர் மாதம் செயல்படும். அதன்பிறகு தண்ணீர் பிரச்னை இருக்காது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details