தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே ஸ்டேஷனில் குடும்பமாக லூட்டி அடிக்கும் யானைகள் - காட்டு யானைகள்

குன்னூர் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் நான்கு குட்டிகளுடன், ஒன்பது யானைகள் உலா வந்துள்ளன.

ரயில் பாதையில் சுற்றித் திரியும் யானைகள்
ரயில் பாதையில் சுற்றித் திரியும் யானைகள்

By

Published : Feb 1, 2022, 11:09 PM IST

நீலகிரி:குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இவ்வனத்தில் யானைகள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் இதமான கால நிலை நிலவுவதால் உணவு, குடிநீருக்காக குன்னூர், மேட்டுப்பாளையம் ரயில் பாதையிலுள்ள ஷில்கிரோவ் ரயில் நிலையத்தில் நான்கு குட்டியுடன், ஒன்பது யானைகள் முகாமிட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்திலிருந்து உதவிக்கு வரும் வரையிலோ ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜினுக்கு நீர் நிரப்பவும் ரயில் பயணிகள் இயற்கை அழகை ரசிக்கவும் 20 நிமிடங்கள் இந்த ரயில் நிலையத்தில் மலை ரயில் நிறுத்தப்படும்.

தற்போது யானைக்கூட்டம் இந்த ரயில் நிலையத்தில் முகாமிட்டு இருப்பதால் ரயில் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் அச்சமடைகின்றனர்.

ரயில் பாதையில் சுற்றித் திரியும் யானைகள்

உயிர்ச் சேதம் ஏற்படும் முன் ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டத்தை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details