நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உலா வந்த வண்ணம் உள்ளன.
சமீபகாலமாக அங்கு யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டு, வேலிகள் அமைத்து விவசாய தோட்டங்களாகவும், சுற்றுலா பயணிகள் தங்கும் காட்டேஜாவும் மாற்றப்படுகிறது.
இதனால் உணவு, தண்ணீர் தேடிவரும் யானைகள் வழிமாறி அவ்வப்போது சாலையைக் கடந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.
இந்தநிலையில் நேற்று (ஜூலை 22) குன்னூர் காட்டேரி பண்ணையில் ஒரு குட்டி யானை உள்பட மூன்று காட்டு யானைகள் புகுந்தன. அங்கு தோட்டக்கலைத் துறையின் உரம் பதனிடும் கிடங்கை சேதப்படுத்தி சென்றன.