தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேற்றில் சிக்கிய யானையை அடித்துக் கொன்ற புலி - நீலகிரியில் நடந்த சோகம்

நீலகிரி: முதுமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் சேற்றில் சிக்கி தவித்த  15 வயது கருவுற்ற பெண் காட்டு யானையைப் புலி அடித்துக் கொன்ற சம்பவம் வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேற்றில் சிக்கிய யானையை அடித்துக் கொன்ற புலி!
சேற்றில் சிக்கிய யானையை அடித்துக் கொன்ற புலி!

By

Published : May 25, 2021, 3:50 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைப் புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக, மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. இதனையடுத்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வரத்தொடங்கி உள்ளன.

அவற்றைக் கண்காணிக்க வனத்துறையினர் தினந்தோறும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல சிங்காரா மின்நிலையம் அருகே உள்ள கரியமாளா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது பெண்காட்டு யானை உயிரிழந்திருப்பதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக வனச்சரகர் காந்தன், துணை கள இயக்குநர் ஸ்ரீகாந்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

முதுமலை கால்நடை மருத்துவருடன் அங்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலைப் பரிசோதனை செய்தனர். அதில் அந்தப் பெண் யானை கருவுற்று இருந்ததும், சேற்றில் சிக்கி வெளியில் வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த புலி, யானையை அடித்துக்கொன்று சாப்பிட்டு இருப்பதும் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details