சாலையை மறித்து உணவு உட்கொண்ட காட்டு யானைகள்! - உணவு
நீலகிரி: கோயிலில் கட்டியிருந்த வாழை மரத்தை தின்ன வந்த மூன்று காட்டு யானைகள், சாலையை மறித்து நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அதனை வேடிக்கையாக பார்த்துச் சென்றனர்.
food
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குஞ்சப்பண்ணை அருகே சாலையோரத்தில் அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலின் திருவிழா நேற்று முடிந்த நிலையில், வனப்பகுதியிலிருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களைத் தின்றன. அந்த யானைகள் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாழைமரங்களை தின்றுகொண்டிருந்தன. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவற்றை தொந்தரவு செய்யாமல் வேடிக்கையாகப் பார்த்துச் சென்றனர்.