தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி பலி - கீழ்கோத்தகிரி

நீலகிரி:  கீழ் கோத்தகிரி அருகேயுள்ள கண்டிபட்டி தேயிலை தோட்ட தொழிலாளி பாலன் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி பலி

By

Published : Jul 17, 2019, 7:07 PM IST

கீழ் கோத்தகிரி கண்டிபட்டி அருகே உள்ள எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் பாலன்(66). இன்று வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இதனையடுத்து, காலையில் பக்கத்து வீட்டுக்காரர் தன் தோட்டத்திற்கு செல்லும் பாதையில் பாலன் யானை தாக்கி இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளார்.

கீழ் கோத்தகிரி

உடனடியாக வனத் துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details