தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கறை நல்லது’ - குன்னூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி - the nigiris district news

நீலகிரி: குன்னூர் மாவட்டத்தில் ’கறை நல்லது’ என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு
வாக்காளர் விழிப்புணர்வு

By

Published : Mar 6, 2021, 6:25 PM IST

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலத் தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் இன்று (மார்ச் 6), ’கறை நல்லது’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மக்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்வோம் எனப் பலகையில் கையெழுத்திட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' - வீட்டின் முன்பு பதாகை வைத்து பரப்புரை!

ABOUT THE AUTHOR

...view details