தமிழ்நாடு

tamil nadu

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் சீசன் தொடக்கம்

By

Published : Jul 22, 2022, 8:40 PM IST

நீலகிரி மாவட்டம் பர்லியார் பண்ணையில் குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படும் துரியன் பழம் சீசன் தொடங்கியது.

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் சீசன் தொடக்கம்
குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் சீசன் தொடக்கம்

நீலகிரி: குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழ மரங்கள் உள்ளன. 35 மரங்களில் தற்போது குழந்தை பாக்கியத்தை தரும் மருத்துவ குணம் வாய்ந்த துரியன் பழங்கள் காய்க்க தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. இந்த பழத்தை உண்பதன் மூலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க கூடிய மருத்துவ குணம் உள்ளது என்பதால் ஆண்டுதோறும் விற்பனை அதிகரிக்கிறது.

இங்குள்ள 35 மரங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஜூன், ஜூலை மாதங்களில் பழங்கள் காய்க்கத் தொடங்கும். இந்த பழம் பழுத்து மரத்திலிருந்து தானாக கீழே விழும். அவற்றை சேகரித்து கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:பெரியகுளத்தில் சாதியை சொல்லி ஆசிரியர்கள் திட்டுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details