நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் பல்வேறு அரியவகை மூலிகைத் தாவரங்கள், பழங்கள் விளைகின்றன. இதில் குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு இத்துரியன் பழமானது அதிக அளவில் காய்த்துள்ளது.
ஆனால் தற்போது இந்தக் கரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் வராமல் உள்ளனர். இதன் காரணமாக பர்லியார் பகுதியில் விளைந்துள்ள துரியன் பழமானது மரத்திலேயே பழுத்து கீழே விழுந்து வருவதோடு, வியாபாரிகளும் பழங்களை அதிக அளவில் வியாபாரம் செய்ய முடியாமல் வேதனை அடைந்துவருகின்றனர்.