நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை, காலதாமதமாக தொடங்கிய நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! - nilgiris
நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
heavyrain
நேற்று பிற்பகல் முதல் கூடலூர், பந்தலூர், தேவாலா, உதகை, நடுவட்டம், இத்தலார், எமரால்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.