நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனுக்காக மலர் நாற்று நடவுப் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும். இந்த ஆண்டு கோடை சீசனுக்காக ஒரு லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி தொடங்கியுள்ளது.
இதில் ஜெர்மனி, நெதர்லாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகளிலிருந்து நாற்றுகள் தயார்செய்து இதில் சால்வியா மேரி கோல்ட் ஆஸ்டர் பிளக்ஸ் சூரியகாந்தி உள்ளிட்ட 30 வகையான நாற்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறையினர் செய்துவருகின்றனர். மேலும் தற்போது கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு 50 விழுக்காடு மட்டுமே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காட்டேரி பூங்காவில் கடந்த சில நாள்களாகச் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக பூங்கா அருகில் உள்ள சிறு வியாபாரிகள் வியாபாரம் இல்லாததால் வேதனை அடைந்துவருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் காட்டேரி பூங்கா