தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ராஜ்நாத் சிங் - wellington nilgiri news

தமிழ்நாடு வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெலிங்டனில் இன்று ராணுவ அலுவலர்களுடன் உரையாற்றுகிறார்.

rajnath
ராஜ்நாத் சிங்

By

Published : Aug 29, 2021, 9:23 AM IST

குன்னூர் : வெலிங்டனில் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் எம்.ஆர்.சி. ராணுவ மையம், ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ பயிற்சி கல்லூரி ஆகியவை உள்ளன.

ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி தோழமை நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்துள்ளார்.

இதற்காக விமானம் மூலம் நேற்று கோவை வந்தடைந்தார். நீலகிரியில் கடும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்றார்.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details