நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக எல்லையில் இரவு ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலத்தின் சுல்தான் பத்தேரி இருந்து மைசூர் செல்லும் சாலையும் இரவில் மூடப்படுகிறது.
கூடலூர் - மைசூர் சாலை நிரந்தரமாக மூட வாய்ப்பு! - People have urged the Tamil Nadu government to pay attention
நீலகிரி: கூடலூர் - மைசூர் சாலை நிரந்தரமாக மூடப்படும் நிலை உள்ளதால், இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு வரக்கூடிய இரு சாலைகளும் பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியில் உள்ளதால் 24 மணி நேரமும் முழுமையாக அச்சாலையை மூடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் அமைப்பு மனு அளித்துள்ளது.
இது நீலகிரி மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் தமிழ்நாடு அரசிடமும் உரிய கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளனர். இந்த சாலை மூடப்பட்டால் வியாபாரிகள் முதல் பொது மக்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.