தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் விளைந்த ஜம்போ நார்த்தங்காய்: அலைமோதும் மக்கள் கூட்டம் - குன்னூர்

குன்னூரில் விளைந்துள்ள அதிக எடை கொண்ட அரியவகை ஜம்போ நார்த்தங்காயை உள்ளூர் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

By

Published : Sep 3, 2021, 7:56 PM IST

நீலகிரி: குன்னூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பிளம்ஸ், பேரி, பீச், பட்டர் புரூட், மங்குஸ்தான், துரியன் உள்பட பல்வேறு அரியவகை பழங்கள் அங்கு விளைவிக்கப்பட்டு விற்பனைசெய்யப்படுகின்றன.

அதன்படி குன்னூரில் வசித்துவரும் உஷா பிராங்ளின், தனது தேவைக்காக வீட்டுத் தோட்டத்தில் ட்ரீ டொமேட்டோ, முள் மேரக்காய், ஆஸ்திரேலியா கொய்யா உள்பட பல அரியவகை பழங்களை விளைவித்துவருகிறார்.

மருத்துவ குணங்கள் நிறைந்த ஜம்போ

இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து, ரூட்டேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஜம்போ சிட்ரான் எனப்படும் ஜம்போ நார்த்தங்காயை கொண்டுவந்து நடவுசெய்துள்ளார்.

தற்போது காய்த்துக் குலுங்கும் ஜம்போ நார்த்தங்காய் பழம் ஒன்று 3 கிலோ வரை எடை கொண்டுள்ளது. இதன் சாறு புத்துணர்வை அதிகரிக்கவும், வாசனை திரவியங்கள் தயாரிக்க, தொண்டை புண்ணை குணப்படுத்த போன்ற பல்வேறு காரணிகளுக்குப் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் சிட்ரான் பழத்தைக் கொண்டு, வெளிநாட்டு மக்கள் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் விளைந்துள்ள இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த ஜம்போ நார்த்தங்காயைக் காண உள்ளூர் மக்கள் அலைமோதிவருகின்றனர்.

இதையும் படிங்க:'பசுமை தமிழகம் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டம்'

ABOUT THE AUTHOR

...view details