நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக மூன்று லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வகைகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பூங்காவில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்கா பண்னையில் 5000 மலர் நாற்றுக்கள் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகளில் கோடை சீசனுக்கு வைக்கப்பட உள்ளது.