கோவை, செல்வபுரத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் மகள் இந்திரா பிரியதர்ஷினி (24). உதகை சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சகராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
திருமணம் நின்ற விரக்தியில் அரசு பெண் ஊழியர் தற்கொலை - REASON
குன்னூர்: சார்பு நீதிமன்றதில் பணிபுரியும் பெண் ஊழியர், திருமணம் நின்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதைக் கண்ட அவரது தோழிகள் உடனடியாக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
மேலும் இந்திராவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மாப்பிளை பார்த்ததாகவும் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மாப்பிள்ளை மனதில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து B1 காவல்துறையினர் வழக்குப் புதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.