ஊட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதில் 40 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆகாமல் திரும்பி வந்துள்ளது.
ஏடிஎம் கருவியில் கள்ள நோட்டுகளை செலுத்த முயன்றவர் கைது
ஊட்டியில் உள்ள தனியார் வங்கியில் ஏ.டி.எம் கருவியில் கள்ள நோட்டுகளை செலுத்த முயன்றவர் கைது.
மீண்டும் மீண்டும் அதை டெபாசிட் செய்ய முயன்றபோது வங்கியின் துணை மேலாளருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. உடனடியாக அவர் சென்று பார்த்தபோது, ஆனந்த் பணம் செலுத்த முயற்சித்ததை பார்த்து துணை மேலாளர் UV கருவியின் மூலம் அந்த 40 ஐநூறு ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது, அது கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வங்கியின் துணை மேலாளர் ஆனந்தை வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த பணத்தை நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த கமல்நாத் என்பவரிடம் வட்டிக்கு வாங்கியதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து கமல்நாத்தை பிடிக்க வடவள்ளி காவல் துறையினர் ஊட்டிக்கு சென்றுள்ளனர்.