தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் - மக்கள் குற்றச்சாட்டு

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய வீடுகள் கட்டப்படாமல் பழைய வீடுகள் சீரமைத்து தரப்படுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்

By

Published : Jul 30, 2021, 8:42 AM IST

Updated : Jul 30, 2021, 11:58 AM IST

நீலகிரி: பழங்குடியின மக்களுக்காக ஒன்றிய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.

குன்னூர் பர்லியார் ஊராட்சியில் உள்ள சின்ன குரும்பாடி பகுதியில் குரும்பர் இன பழங்குடியின மக்களுக்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் ரூபாய் மானியத்தில் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

வீடு இடிந்து விழும் அபாயம்

இதனால் பழைய குடியிருப்புகளில் இருந்த மக்கள் மாற்று வீடுகளுக்குச் சென்றனர். ஆனால் பழைய வீடுகளை இடித்து புதிய முழு வீடுகள் கட்டுவதற்கு பதில் பழைய வீட்டின் பக்கவாட்டுச் சுவருடன் இணைத்து கம்பிகள் அடங்கிய பில்லர் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய பக்கவாட்டுச்சுவர்கள் விரிவல் ஏற்பட்டுள்ளதால் அதனுடன் இணைத்து புதிய பில்லர்கள் அமைத்து வீடுகள் கட்டப்படுவதால் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது என பழங்குடியின மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் இது போன்ற பழங்குடியினருக்கான திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து, தரமான முழு வீடுகள் கட்டித்தர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி தொடர்பாக முறையான தகவல் இல்லை- பொதுமக்கள் சாலை மறியல்

Last Updated : Jul 30, 2021, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details