தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேவிட்-19 அச்சம்: வெறிச்சோடிய உதகை - மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள்

நீலகிரி: கேவிட்-19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத் தலங்களில் அடிதகளவில் மக்கள் கூட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து உதகையில் சுற்றுலாப் பயணிகளின் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

corona virus precautionary activities of tamilnadu government all tourist place was closed
கொரோனா அச்சம்: வெறிச்சோடிய உதகை

By

Published : Mar 17, 2020, 2:09 PM IST

கேவிட்-19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகளவில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் வழக்கமாக உதகையில் நாளொன்றிற்கு பத்தாயிரம் பேர் வரை வருகை தருவர். தற்போது சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பகுதிகளில் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.

கொரோனா அச்சம்: வெறிச்சோடிய உதகை

இதனால், சுற்றுலாத் தலங்களை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்குத் தடை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details