தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரட் வீணாகும் அபாய நிலை : நீலகிரி விவசாயிகள் வேதனை - corona issue

நீலகிரி: குன்னூர் பகுதிகளில் காய்கறிகள் பராமரிப்புக்கு தடை விதிப்பதால் காரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

nilgiris
nilgiris

By

Published : Mar 28, 2020, 11:42 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரட், உருளைக் கிழங்கு, பூண்டு, உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில். அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் விவசாய தொழிலாளர்கள் பணிகள் மேற்கொண்டபோதும், காவல் துறையினர் சில இடங்களில் பராமரிப்புப் பணிகளைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

நீலகிரி விவசாயிகள் வேதனை

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "காவல் துறையினர் தடுப்பதால் காய்கறிகளை விளைவிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. காரட் உள்ளிட்டவை வீணாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:'கரோனாவுக்கு பயந்தா ஆகுமா?' - ஊரடங்கிலும் மணல் கடத்தல்

ABOUT THE AUTHOR

...view details